ராட்டினம் அறுந்து சிறுவன் பலி,ரூ,2,600 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு....!
09 Dec,2024
அமெரிக்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து 14 வயது சிறுவன் பலியான நிலையில், அந்த சிறுவனின் பெற்றோருக்கு கேளிக்கை பூங்கா நிறுவனம் 2600 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேளிக்கை பூங்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ராட்டினத்தில் பலர் சவாரி செய்தனர். அப்போது திடீரென அந்த ராட்டினம் அறுந்து விழுந்ததை அடுத்து, 14 வயதுடைய சாம்சங் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து பூங்காவுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், விபத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கேளிக்கை விடுதியை நடத்தும் ஐகான் பார்க் என்ற நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது
பாதுகாப்பு இல்லாமல் ராட்டினம் இயக்கியதாக வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. இந்த தீர்ப்பில், ஐகான் பார்க் நிறுவனம் சிறுவனின் பெற்றோருக்கு 2600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.