சிரியா நகரை கைப்பற்றும் நிலையில் சிரிய கிளர்ச்சியாளர்கள் - மூன்று திசைகளிலும் சுற்றிவளைப்பு
05 Dec,2024
சிரிய கிளர்ச்சியாளர்கள் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த ஹமா நகரை மூன்று திசைகளிலும் இருந்து சுற்றிவளைத்துள்ளனர்.
சிரிய அரசாங்கம் அலப்போவை அவர்களிடமிருந்து மீள கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ள போதிலும் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றும் நிலையில் உள்ளனர்.
சிரியாவிற்கும் ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கும் மூலோபாய ரீதியில் ஹமா நகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிரியாவை ஆட்சி செய்பவர்களிற்கும் தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இந்த நகரம் மிகவும் முக்கியமானது.
அலெப்போவை எதிர்பாராத அதிரடி தாக்குதல் மூலம் கைப்பற்றிய ஒரிரு நாட்களிற்குள் ஹமா நகரை கைப்பற்றும் நடவடிக்கையில் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிளர்ச்சிக்காரர்கள் ஹமா நகரை மூன்று திசைகளிலும் சுற்றிவளைத்துள்ளனர், அந்த நகரத்திலிருந்து மூன்று நான்கு கிலோமீற்றர் தொலைவில் உள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.