மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்: ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்
26 Nov,2024
இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் (Gaza) உள்ள பலஸ்தீனர்கள் (Palestine) மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது லெபனானில் (Lebanon) இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதத்திலிருந்து இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி தாக்குதல் அதிகரித்துள்ளது. லெபானான் மீது தரைவழி மற்றும் வான் தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்தது.அதற்கு ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆலோசனை நடத்திய பிறகு போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து லெபனான் (ஹிஸ்புல்லா) உடனான போர் நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பு இஸ்ரேல் அமைச்சரவையில் இன்று (26.11.2024) நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தம் உடினடியாக ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் அதிகாரிகள் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. அதிகாரிகளுடன் இஸ்ரேல் அதிகாரிகள் இன்று மாலை சந்திக்கவுள்ளதுடன். அப்போது போர் நிறுத்தம் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.