துருக்கியில் ரஷ்ய விமானம் தீப்பிடித்து விபத்து., 95 பேர் மீட்பு
26 Nov,2024
ரஷ்யாவின் சோச்சி நகரில் இருந்து துருக்கியில் உள்ள அன்டால்யாவுக்கு நேற்று முன்தினம் ஒரு விமானம் சென்றது. ரஷ்யாவின் அஸிமூத் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் துருக்கியில் உள்ள அன்டால்யாவில் தரையிறங்கிய போது அதன் இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து விமானத்தில் இருந்த 89 பயணிகள்,6 விமான ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில், விமான நிலைய தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என துருக்கி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது