பைடனை எச்சரிக்கும் புடின்!
19 Nov,2024
ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.
அமெரிக்கா இதனை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கையானது அமெரிக்க கொள்கையின் முக்கிய மாற்றமாக கருதப்படுகின்றது.
அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்திருந்தார்.
ஏடிஏசிஎம்எஸ் எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் ரஷ்ய எல்லைகளுக்கு அப்பால் ஏவகணை பயன்பாட்டிற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.