ஈரானுக்காக களமிறங்கும் சீனா.. ஈரான்க்கு 100 போர் விமானம்? இஸ்ரேலுக்கு சிக்கல்
15 Nov,2024
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலுக்கு நடுவே சீனா மூக்கை நுழைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இஸ்ரேலை சமாளிக்கை ஈரானுக்கு, சீனா ஜே-10சி எனும் ரகத்தை சேர்ந்த 100 போர் விமானங்களை வழங்கவும் வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் உண்மையிலேயே இஸ்ரேலுக்கு சீனாவால் புதிய சிக்கல் என்பது ஏற்படும். பாலஸ்தீனத்தின் காசா மீதான போர் மற்றும் லெபானாலில் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் உள்ளிட்டவற்றால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. குறிப்பாக ஈரான் தலைநகர் டெக்ரானில் வைத்தே ஹமாஸ் தலைவரை போட்டு தள்ளியது, லெபனானில் வைத்து ஹிஸ்புல்லா தலைவரை வீழ்த்தி உள்ளிட்டவற்றால் ஈரான் கடும் சினம் கொண்டுள்ளது. இதனால் தான் சமீபத்தில் ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் விமானப்படையினர், ஈரானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இதனால் தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையே பெரும் பதற்றம் என்பது நீடித்து வருகிறது.
இஸ்ரேல் - ஈரான் மோதலை பொறுத்தவரை சீனா, ஈரான் பக்கம் நிற்கிறது. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் பக்கம் உள்ளது. இதற்கிடையே தான் சீனாவால் இஸ்ரேலுக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சீனாவும் பாதுகாப்பு துறையில் அதிக சக்தி வாய்ந்த நாடாக உள்ளது. கப்பற்படை, விமானப்படையில் நவீன தொழில்நுட்பங்கள் என்பது சீனாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் சீனாவின் ஹூஹாய் நகரில் நவம்பர் 12ம் தேதி விமான கண்காட்சி என்பது நடந்தது. இந்த விமான கண்காட்சியில் ஈரான் விமானப்படை கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் ஹமீத் வாஹேடி பங்கேற்று பார்வையிட்டார். இந்த வேளையில் சீனாவின் 4.5 வது ஜெனரேஷன் விமானம் என்று அழைக்கப்படும் Chengdu J-10 (சுருக்கமாக ஜே-10சி) போர் விமானத்தை பார்த்து ஈரான் விமானப்படை அதிகாரி வியந்தார். அந்த விமானம் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி கேட்டறிந்தார். வெடிக்கும் 3ம் உலகப்போர்? இஸ்ரேலின் அடுத்த டார்க்கெட் துருக்கியா? பாதுகாப்பு துறை அமைச்சர் வார்னிங் இந்த விமானம் அதிக எடையின்றி மீடியமான எடையில் இருக்கும். அதேபோல் சிங்கிள் என்ஜின் கொண்டது. மல்டிரோல் காம்பட் வகையை சேர்ந்த இந்த விமானம் டெல்டா விங்க் மற்றும் கேனார்ட் டிசைனை கொண்டது. இதுதான் இஸ்ரேலுக்கு கெட்ட செய்தியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சீனாவுக்கும், ஈரானுக்கும் நல்ல உறவு என்பது உள்ளது. இருநாடுகளும் ராணுவ கூட்டு பயிற்சிகளையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இருநாடுகளும் ராணுவ கூட்டு பயிற்சி தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்டது. இந்த ஆலோசனையை ஈரான் விமானப்படை அதிகாரியான ஹமீத் வாஹேடி, சீனாவின் விமானப்படை ஜெனரலும் சாங்க் தின்க்யூ ஆகியோர் விவாதித்தனர். மேலும் இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஈரான் விமானப்படை அதிகாரி ஹமீத் வாஹேடி, "40 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற விலையில் 100 J-10சி போர் விமானங்களுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும். ஜே-10சி போர் விமானம் என்பது எஃப் -16 ரக போர் விமானங்களை விட அதிக செயல்திறன் கொண்டது'' என்று கூறியுள்ளார். இதனால் ஈரான் விரைவில் சீனாவிடம் இருந்து 100 ஜே - 10சி ரக போர் விமானங்களை வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது நடக்கும் பட்சத்தில் அது இஸ்ரேலுக்கு பெரும் பிரச்சனையாக மாறலாம். ஏனென்றால் தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு துறையில் பெரும் பலத்துடன் உள்ளது. குறிப்பாக எப்35 ரக போர் விமானங்களை இஸ்ரேல் வைத்துள்ளது. ஆனால் இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரானின் ஏவுகணை பிரிவு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் விமானப்படை வீக்காக இருக்கிறது. இதனால் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் ஈரான் விமானப்படையில் அதிநவீன விமானங்களை சேர்ப்பது முக்கியம். அந்த வகையில் சீனாவின் ஜே - 10சி ரக விமானங்களை இணைத்தால் ஓரளவு இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்று ஈரான் நினைக்கிறது. இதனால் ஈரானுக்கு உதவி செய்வதன் மூலம் சீனாவால், இஸ்ரேலுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.