கல்லறைகளுக்கு நடுவில் சுரங்கம் அமைத்த ஹிஸ்புல்லா, வெளியான அதிர்ச்சி காணொளி
                  
                     11 Nov,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	கல்லறைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் சுரங்கங்களை இஸ்ரேல் (Israel) இராணுவம்  அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
	 
	லெபனானில் (Lebanon) செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் தரைவழி தாக்குதலை தொடங்கியது.
	 
	இந்த தரைவழி தாக்குதல்களினால் ஹிஸ்புல்லாவின் பல சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து இஸ்ரேல் ராணுவம் அழித்து வருகிறது. இந்த நிலையில் கல்லறை தோட்டத்திற்குள் கல்லறைகளுக்கு நடுவே ஹிஸ்புல்லா பிரமாண்ட சுரங்கத்தை அமைத்துள்ளது.
	 
	இந்த சுரங்கம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் கட்டுப்பாட்டு அறைகள், தூங்கும் வசதி கொண்ட அறைகள், மேலும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
	 
	 
	4500 கனமீட்டர் கான்கிரீட் கொண்டு அந்த சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் மூடியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் லெபனானில் மக்கள் வசிக்கும் வீட்டிற்குள்ளே ஹிஸ்புல்லா அமைப்பு சுரங்கப்பாதை அமைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.