ஜப்பானில் ஒனகாவா அணு உலை மூடல்
04 Nov,2024
ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணு உலை சேதமடைந்து பயங்கர கதிர்வீச்சை வெளியிட்டன. இங்கிருந்து சுமார் 100கி.மீ. தொலைவில் உள்ள ஒனகாவா அணு உலை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் தாக்கப்பட்டபோதும் பாதுகாப்பாக ஷட்டவுன் செய்யப்பட்டது. இந்த அணு உலை கடந்த 29ம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. இதனையடுத்து நவம்பரில் அணு உலை மின்உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அணு உலைக்குள் இருக்கும் நியூட்ரான் தரவு தொடர்பான சாதனத்தில் நேற்று முன்தினம் கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்பட்ட அணுஉலையானது 5 நாட்களுக்கு பின் மீண்டும் மூடப்பட்டது. அணு உலை மீண்டும் எப்போது செயல்பட தொடங்கும் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.