அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்ய நாளை தேர்தல்  பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
                  
                     04 Nov,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி மாகாணங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதை அடுத்து அணைத்து மாகாணங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு மையங்களில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
	 
	 
	அமெரிக்காவில் வாக்காளர்களுக்கு தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வாக்களிக்கும் வசதி உள்ளதால் சில வாரங்களுக்கு முன்னரே தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் சுமார் 6 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவுக்கு கடைசி நாளான நேற்று ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினர்.
	 
	அமெரிக்காவில் நாளை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவு இரவுடன் நிறைவு பெற்றது. இதனை அடுத்து வாக்கு எண்ணகைகாக வாக்கு சீட்டுகளை அடுக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா முழுவதையும் தேர்தல் பரபரப்பு தொற்றி கொண்டிருக்கும் நிலையில் தலைநகர் வாசிங்டனில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் மாகாணங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
	 
	மக்கள் அதிக அளவில் திரளக்கூடும் என்பதால் வெள்ளை மாளிகை வளாகத்தை சுற்றி தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய வாக்கு பதிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக குடியரசு கட்சியின் வேட்பாளர் டோனல் டிரம்ப் குற்றம்சாட்டி இருப்பதாய் அடுத்து குழப்பங்களை தடுக்க அமெரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது