ஹிஸ்புல்லாவிற்கு மற்றுமொரு அடி : முக்கிய கடற்படை தளபதியை சிறைபிடித்தது இஸ்ரேல்
                  
                     02 Nov,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கடற்படை தளபதியை கைது செயதுள்ளதாக இஸ்ரேல்(israel) அறிவித்துள்ளது.நேற்று (01.11.2024) வடக்கு லெபனானில்(lebanon) தமது கமாண்டோ படையினரால் இவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
	 
	கைது செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தளபதியின் பெயர் இமாத் அம்ஹாஸ் எனவும் இவர் அந்த அமைப்பின் கடற்படையின் மூத்த உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
	 
	விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்
	ஹிஸ்புல்லாவின் கடற்படை நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க இமாத் அம்ஹாஸ் அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
	 
	 
	கைதுடன் தொடர்பு : ஐ.நா அமைதிப்படை மறுப்பு
	இதேவேளை நேற்று வடக்கு லெபனானில் இஸ்ரேலிய கடற்படை கமாண்டோக்களால் ஹிஸ்புல்லா கடற்படைத் தளபதி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று ஐ.நா அமைதிப்படை(UNIFIL) மறுத்துள்ளது என்று அரபு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
	 
	 
	சவுதி(saudi) செய்தி நிறுவனமான அஷார்க் நியூஸ்( Asharq News) ஐ.நா அமைதி காக்கும் படையின் பெயரிடப்படாத துணை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி, "எந்தவொரு கடத்தல் அல்லது லெபனான் இறையாண்மையை மீறுவதற்கும் உதவுவதில் UNIFIL க்கு எந்த தொடர்பும் இல்லை."
	 
	"தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது பொறுப்பற்றது மற்றும் அமைதி காக்கும் படைகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.