ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
30 Oct,2024
வடகொரியா சுமார் 10,000 இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியுள்ளதாக திங்கட்கிழமை (28) அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பென்டகனின் அண்மைய மதிப்பீடு ரஷ்யாவில் 3,000 வட கொரிய பணியாளர்கள் என்ற அதன் முந்தைய மதிப்பீட்டை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.
உக்ரேனுடனான போரில் இவர்கள் கிழக்கு ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டலாம், இது ரஷ்ய படைகளை வலுப்படுத்தும் என்றும் பென்டகன் கூறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நடவடிக்கையை மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார்.
இதேவேளை வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், ரஷ்யாவிற்கு வீரர்கள் அனுப்பப்படுவது பற்றிய ஊடக அறிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் பியோங்யாங் அத்தகைய நடவடிக்கையை எடுத்திருந்தால், அது சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் என்று தான் நம்புவதாக கூறினார்.