இஸ்ரேல்.குறி.. நாடு முழுக்க சைபர் அட்டாக்... அணு உலைகளுக்கும் குறி..
12 Oct,2024
மத்திய கிழக்கில் நடந்து வரும் கடுமையான மோதலுக்கு இடையில்.. ஈரான் மீது இஸ்ரேல் சைபர் அட்டாக் எனப்படும் இணையத் தாக்குதல்களை நடத்தி உள்ளது. ஈரான் அரசாங்கத்தின் 3 முக்கியமான தூண்களை குறி வைத்து இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. கடந்த அக்டோபர் 1 அன்று ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் உள்ளானது.
200 க்கும் அதிகமான ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது. இதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் தற்போது ஈரான் மீது சைபர் அட்டாக் நடத்தி உள்ளது. ஈரானின் சைபர்ஸ்பேஸின் முன்னாள் செயலாளர் ஃபிரூசாபாடி, "ஈரான் அரசாங்கத்தின் கிட்டத்தட்ட மூன்று முக்கியமான துறைகள்- நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகக் கிளை ஆகியவை தாக்கப்பட்டு உள்ளன. எங்கள் அரசு கடுமையான சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பல தகவல்கள் அவற்றில் இருந்து திருடப்பட்டுள்ளன.
எங்கள் அணுசக்தி வசதிகள் இணையத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு உள்ளது. எங்களின் அணு மின்சார உற்பத்தி மையங்களை இஸ்ரேல் சைபர் அட்டாக் மூலம் தாக்கி உள்ளது. இதனால் எரிபொருள் விநியோகம், நகராட்சி நெட்வொர்க்குகள், போக்குவரத்து நெட்வொர்க்குகள், துறைமுகங்கள் மற்றும் நிதி துறைகள் போன்ற பல நெட்வொர்க்குகள் குறிவைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுக்க பல சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன, என்று ஈரானின் சைபர்ஸ்பேஸின் முன்னாள் செயலாளர் ஃபிரூசாபாடி தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை: சமீபத்தில் ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நாட்டின் பதிலடி மோசமாகவும் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார். இஸ்ரேலை ஈரான் தாக்கி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் தாக்குதல் ஆபத்தானதாகவும், துல்லியமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமாகவும் இருக்கும். என்ன, எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியாது.
ஈரான் யோசிக்க முடியாத வகையில்.. யோசிக்க முடியாத இடத்தில் அவர்களை அடிப்போம். அவர்கள் முடிவுகளைப் பார்த்து ஆச்சர்யம் அடைவார்கள்.. அதிர்ச்சி அடைவார்கள், என்று இஸ்ரேல் படை வீரர்களுக்கு ஆற்றிய உரையின் போது கேலண்ட் கூறி உள்ளார். எங்களைத் தாக்குபவர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் அதற்குரிய விலையைக் கொடுப்பார்கள் என்று உலகத்திற்கு தெரிய வேண்டும்.
அதை தெரியப்படுத்தும் விதமாக இந்த தாக்குதலை நடத்துவோம், என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் மத்திய கிழக்கில் நடந்து வரும் கடுமையான மோதலுக்கு இடையில்.. ஈரான் மீது இஸ்ரேல் சைபர் அட்டாக் எனப்படும் இணையத் தாக்குதல்களை நடத்தி உள்ளது. ஈரான் அரசாங்கத்தின் 3 முக்கியமான தூண்களை குறி வைத்து இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாக,
அக்டோபர் 1ம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இதையடுத்து சமீபத்தில் இஸ்ரேல் அமெரிக்கா இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இஸ்ரேல் அமெரிக்கா இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்.. ஈரானை எப்படி தாக்க வேண்டும்.. எங்கே தாக்க வேண்டும்.. என்று பதிலடி கொடுப்பது பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.