இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
01 Oct,2024
இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் சிபிஎஸ் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் ஈரானிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி இந்த தாக்குதலை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தன்னை தயார்படுத்துவதற்கு அமெரிக்கா உதவுகின்றது என தெரிவித்துள்ளார்