திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்
18 Sep,2024
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
தொலைத்தொடர்பு சாதனங்கள் திடீரென வெடித்துச்சிதறியதில் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பின் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.
பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளிலும் லெபானின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பல பேஜர்கள் வெடித்துச்சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் தரையில் அமர்ந்திருப்பதையும் ஏனையவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கடைகளில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.