காஃபி பிரேக்கில் செக்ஸ் வச்சிக்கோங்க” - குழந்தை பிறப்பை அதிகரிக்க ரஷ்யா புதிய முயற்சி!
17 Sep,2024
“ஆபீஸ் காஃபி பிரேக்கில் செக்ஸ் வச்சிக்கோங்க” - குழந்தை பிறப்பை அதிகரிக்க ரஷ்யா புதிய முயற்சி!
ரஷ்யாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துவரும் நிலையில், அதனை அதிகரிக்க ரஷ்யா அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் வேலை பிரேக் நேரத்தில் தாம்பத்தியம் கொள்ளுங்கள் என சொல்லியிருப்பது விவாதமாக மாறியுள்ளது.
ரஷ்யாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊழியர்கள் அலுவலக நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நிலவி வரும் சூழலில் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ளது. தற்போது ரஷ்ய அரசு குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில், கடந்த ஆண்டு குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 என இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 1.5 என குறைந்துள்ளது. எனவே இதனை அதிகரிக்க ரஷ்ய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் வேலையில் கிடைக்கும் உணவு இடைவேளை மற்றும் காஃபி இடைவேளை நேரங்களில் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : என் மீதான கொலை முயற்சிக்கு பைடன், கமலா ஹாரிஸ் தான் காரணம் - டொனால்டு டிரம்ப்
ரஷ்யாவில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த 1999ம் ஆண்டுக்கு பிறகு தற்போது பெரிய அளவில் குறைந்துள்ளது. அதேசமயம், இறப்பு விகிதம் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.
அதன்படி, 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் இலவசமாக கருவுறுதல் சோதனை செய்துக்கொள்ளலாம், முதலாளிகள் தங்கள் பெண் ஊழியர்களை குழந்தைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்துவது, கருக்கலைப்புக்கு பல கட்டுப்பாடுகள், விவாகரத்துக்கான தொகையை அதிகரிப்பு உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.