நைஜீரியாவில் வெள்ளம் : சிறைச்சாலை சுவர் இடிந்து வீழ்ந்ததில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
17 Sep,2024
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் சிறைச்சாலை சுவர் இடிந்து வீழ்ந்jதில் குறைந்தது 274 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு சீர்திருத்த சேவை தெரிவித்துள்ளது.
அத்தோடு, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா முழுவதும் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் கைதிகளை பாதுக்காப்பான இடத்திற்கு மாற்றும் போது 281 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நைஜீரிய சீர்திருத்த சேவையின் செய்தித் தொடர்பாளர் அபுபக்கர் உமர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் நடுத்தர பாதுகாப்பு காவலர் மையம் (எம்.எஸ்.சி.சி) மற்றும் நகரத்திலுள்ள பணியாளர்கள் குடியிருப்பு உள்ளட்டங்களாக சிறைச்சாலையின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிறைச்சாலையில் இருந்து தப்பியோடியவர்களின் அடையாளங்கள், அவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, கைதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
நைஜீரியா முழுவதும் கடந்த சில வாரங்ககளாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 269 பேர் உயிரிழந்துள்ளதோடு, 640,000 க்கும் அதிமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.