தீ விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.12 லட்சம் இழப்பீடு: குவைத் அரசு அறிவிப்பு
20 Jun,2024
குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 12 ம்தேதி பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பலியானோர் குடும்பங்களுக்கு தலா
ரூ.12.5 லட்சம் இழப்பீடு வழங்க குவைத் மன்னர் ஷேக் மேஷால் அல் அகமது அல் ஜபேர் அல் சபா உத்தரவிட்டுள்ளார். இதில் கேரளாவை சேர்ந்த
24 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அந்த மாநில அரசு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.