இந்தோனேசியாவில் பாரிய மண்சரிவு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
08 Jun,2024
இந்தோனேசியாவின்(Indonesia) நூசா தெங்கரா மாகாணத்தின் ரேவரங்கா பகுதியில் பெய்த கனமழையால் நேற்று அதிகாலை (07) பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் சிலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சில வீடுகள் மண்ணில் புதையுண்டதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.