சட்ட விரோதமாக பிரித்தானியா செல்ல முற்பட்ட புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்து
06 Jun,2024
பிரித்தானியாவுக்குள் (United Kingdom) நுழையும் முயற்சியில், 84 புலம்பெயர்ந்தோர் பயணித்த சிறுபடகொன்று கவிழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (6)ஆங்கிலக்கால்வாயில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று காலை, 84 புலம்பெயர்ந்தோருடன் சிறுபடகொன்று பிரான்ஸிலிருந்து (France) புறப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப் படகு ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென அதன் எஞ்சின் பழுதடைந்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் திரும்பி பிரான்சுக்கே சென்று விடலாம் என முடிவு செய்து படகை செலுத்தியோர் படகைத் திருப்பும்போது, எதிர்பாராமல் அந்த படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அந்த படகில், ஒரு ஆறு மாதக் குழந்தை உட்பட மூன்று சிறுவர்களும் பயணித்துள்ளார்கள்.
படகு கவிழ்ந்து அதிலிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளிக்க, தகவலறிந்து வந்த பிரான்ஸ் படகொன்று அவர்களை மீட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.