விடிய விடிய தண்ணீருக்காக மக்கள் காத்திருக்கும் அவல நிலை....... ?
03 Jun,2024
தண்ணீரை வீணாக்கக்கூடாது என்பதற்கு பாடமாய், ஒரு கேன் தண்ணீருக்காக விடிய விடிய பல மணி நேரம் மக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீரை துச்சமாக நினைத்து வீணாக்கக்கூடாது என்பதற்கு பாடமாய், ஒரு கேன் தண்ணீருக்காக விடிய விடிய பல மணி நேரம் மக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் அமைந்துள்ளது கோமா நகரம்.
போர் காரணமாக வெளியேறிய மக்கள் பலரும், கோமா நகரத்தில் குடியேறியதால் மக்கள் தொகை மூச்சு திணரும் வகையில் உயர்ந்துவிட்டதாக கூறுகிறார்கள் அப்பகுதியில் பூர்வீகமாக வசிப்போர்.
இதனால், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
சுமார் 12 மணி நேரம் விடிய விடிய காத்திருந்தால்தான், தண்ணீரை கேன்களில் பிடிக்க முடியும் என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இவர்களின் இன்னல்களை அறிந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை மேற் கொண்டுள்ளது.