காசாவில் சுரங்கப்பாதைக்குள் மோதல் - இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பலரை கைது செய்துள்ளதாக ஹமாஸ் தெரிவிப்பு
26 May,2024
காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவவீரர்களை கைதுசெய்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகரித்துள்ளது.படையினர் எவரும் எந்த சம்பவத்தின் போதும் கடத்தப்படவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது