மலேரியா காய்ச்சல்- கென்யாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!
26 Apr,2024
ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள கென்யாவில், மலேரியா காய்ச்சல் வேகமாக பரவுவதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள மிகோரி என்ற கிராமத்தில் ஏராளமானோர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த சில நாட்களில் மட்டும், 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மலேரியாவை குணப்படுத்த போதிய மருந்துகள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த கென்யாவின் வறுமை மற்றும் பொருளாதார நிலை தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்நாட்டில் தயாரிக்கப்படும் உள்ளூர் மருத்துவத்தை வைத்து மலேரியாவை குணப்படுத்த மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச மலேரியா ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், அது தோன்றிய ஆப்ரிக்கா நாட்டில் இன்றளவும் மலேரியாவால் மக்கள் உயிரிழந்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது.