காசாவில் போர் நிறுத்தம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்!
26 Mar,2024
இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடையே ஐந்து மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், ரமலான் பண்டிகையை கருதி காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடையே ஐந்து மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், ரமலான் பண்டிகையை கருதி காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பாதுகாப்பு கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்காத நிலையில், 15 நாடுகளை கொண்ட கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இதன்மூலம் காசாவில் போர் நிறுத்தத்தை தற்காலிகமாக அமல்படுத்துவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தடுத்து நிறுத்தத் தவறிவிட்டதாக இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்த எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், இந்த தீர்மானத்தை அனுமதிப்பதன் மூலம் “கொள்கை நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.