உக்ரைனில் களமிறங்கப்போகும் பிரான்ஸ் படையினர்
20 Mar,2024
ரஷ்ய உக்ரைன் போரில் பிரான்ஸ் வீரர்கள் பங்கேற்றால் முதல் தாக்குதல் அவர்கள் மீது தான் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் படைகள் களமிறங்கும் தேவை அதிகரித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
குறித்த விடயமானது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்ய உளவுத்துறைத் தலைவரான சேர்ஜி (Sergei Naryshkin), போரில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் படைவீரர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டால், அவர்கள்தான் முதன்மை இலக்காக இருப்பார்கள் எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டு படையினர்
அத்தோடு, போரில் பங்கேற்பதற்காக எந்த வெளிநாட்டு படையினர் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டாலும் அவர்கள் தான் முதன்மை இலக்காக தாக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் அர்த்தம் என்னவெனில், ரஷ்ய எல்லைக்குள் வாளுடன் கால் வைக்கும் அனைத்து பிரான்ஸ் படைவீரர்களும் தாக்கப்படுவார்கள், அவர்களுடைய தலைவிதியாக இருக்கும் என Sergei Naryshkin எச்சரித்துள்ளார்.