மெல்பர்னில் வெப்பக் காற்று பலூனிலிருந்து விழுந்து மரணம்
19 Mar,2024
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மார்ச் 18ஆம் தேதி வெப்பக் காற்று பலூன் ஒன்றிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக ஏபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
காலை 7.30 மணிவாக்கில் பிரெஸ்டனில் உள்ள ஆல்பர்ட் ஸ்திரீட்டிற்கு வரும்படி அவசரச் சேவைக்கு அழைப்பு வந்ததாக உள்ளூர்த் தகவல்கள் தெரிவித்தன.
சம்பவத்தைத் தொடர்ந்து, பலூன் யாரா பெண்ட் பூங்காவில் தரையிங்கியது.
அந்த வெப்பக் காற்று பலூன் மெல்பர்னின் வடபகுதியிலிருந்து கிளம்பி, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் காற்றில் பறந்துகொண்டிருந்தபோது, அந்த ஆடவர் பலூன் கூடையிலிருந்து கீழே விழுந்தார்.
அவரது உடல் குடியிருப்பு அக்கம்பக்கப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று விக்டோரியா காவல்துறை கூறியது.
பலூனைச் செலுத்தியவரிடமும் அதில் இருந்த மற்றப் பயணிகளிடமும் விசாரித்து வருவதாகவும் அது தெரிவித்தது.