இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 29000 பாலஸ்தீனியர்கள் பலி
20 Feb,2024
ரபா இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து 29ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரதுறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. இந்நிலையில், முழு வெற்றி அடையும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக
இஸ்ரேல் ராணுவம் விரைவில் எகிப்து எல்லையில் உளள்ள தெற்கு நகரமான ரபாவிற்குள் நுழையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் காசாவில் ஹமாஸ் அரசில் இடம்பெற்றுள்ள சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 29092 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 69000 பேர் காயமடைந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.