ஹவுதி ஏவுகணை தாக்குதலில் கப்பல் சேதம்
20 Feb,2024
: இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுத குழுவினருக்கும் இடையேயான தாக்குதல் நடந்து வருகின்றது. இதில் ஹமாசுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். கடந்த நவம்பர் முதல் செங்கடலில் செல்லும் கப்பல்களை குறிவைத்து இவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலீஸ் நாட்டுக்கொடியுடன் நேற்று முன்தினம் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கப்பல் கடும் சேதம் அடைந்தது. இதனால், அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் வெளியேறினர். மேலும் அமெரிக்காவின் எம்கியூ-9 டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்.