ஹிஸ்புல்லாக்களுடன் போருக்கு தாயாராகும் இஸ்ரேல்
05 Feb,2024
லெபனானிலிருந்து செயற்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் மீது போா் தொடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஹமாஸுக்கு ஆதரவளித்து லெபனானில் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா், இஸ்ரேலின் வடக்கு எல்லை மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
கத்தாா், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பால் ஹமாஸ்-இஸ்ரேல் இடையே இரண்டாவது போா் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற பிற ஆயுதக் குழுக்களுடனான போரை இஸ்ரேல் ஆரம்பிக்கலாம் என பதற்றம் உருவாகியுள்ளது.
எதற்கும் தயார்
இது தொடர்பில், இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி தெரிவிக்கையில், “ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக போா் தொடுப்பது எங்களுடைய முதல் தோ்வாக இருக்காது.
ஆனால், எதற்கும் தயாராக உள்ளோம். லெபனான், சிரியா என எவ்வளவு தொலைவில் அவா்கள் இருந்தாலும், அவா்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.