உக்ரைனின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ரஷ்யாவின் ஏவுகணை கப்பல்
01 Feb,2024
உக்ரைனின் தாக்குதலில் ரஷ்யாவின் ஏவுகணை கப்பலொன்று கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்தம் இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், யுத்தம் முடிவே இல்லாமல் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.
உக்ரைனின் முக்கிய புலனாய்வு இயக்குநரகம் திடீர் தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் இவானோவெட்ஸ்(Ivanovets) என்ற ஏவுகணை கப்பலொன்றை முற்றாக அழித்துள்ளது.
அத்துடன், உக்ரைனின் அதிரடி தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட இவானோவெட்ஸ் கப்பல், ஜனவரி 31ம் திகதிக்கும் பெப்ரவரி 1ம் திகதிக்கும் இடைப்பட்ட இரவில் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் கடல் பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலினால், ரஷ்யாவிற்கு 60 முதல் 70 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இவானோவெட்ஸ்(Ivanovets) கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிறகு ரஷ்யா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்ட போதும் அது வெற்றியடையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.