ரூ.25 லட்சம் கோடி கடன் சீன ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மூட உத்தரவு,
30 Jan,2024
சீனாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே கடனில் மூழ்கியது. திவால் நிலைக்கு சென்ற இந்நிறுவனத்தை மீட்க சீன அரசு பல்வேறு வழிகளில் முயன்றது. இந்நிலையில், எவர்கிராண்டேவின் முக்கிய முதலீட்டாளரான டாப் ஷைன் குளோபல் லிமிடெட் நிறுவனம் ஹாங்காங் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு ெவளியானது. எவர்கிராண்டே நிறுவனம் வாங்கிய
ரூ.25 லட்சம் கோடி கடனை மறுசீரமைப்பு செய்யாததால் அந்நிறுவனத்தை மூடவும், அதன் சொத்துக்களை விற்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் ஹாங்காங் பங்குச்சந்தையில் எவர்கிராண்டேவின் பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல, பல்வேறு சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் கடனில் சிக்கி தவித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் சீனாவில் ரியல் எஸ்டேட் துறையையே முடக்கி, அந்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.