ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிர்ணயித்த காலக்கெடு
24 Jan,2024
ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகள் ஏமன் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை உத்தரவிட்டுள்ளது.
காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதலை கண்டித்து ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை, செங்கடல் பகுதியில் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், செங்கடல் பகுதியின் சீரான கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதோடு உலகளாவிய பணவீக்கம் குறித்த தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தனர்.
இதையடுத்து கடந்த 11ம் திகதி ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையின் இருப்புகளை குறி வைத்து அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகள் இணைந்து தாக்குதல் நடத்தினர்.
ஆனால் ஈரானுடன் இணைந்த குழுவுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகள் இணைந்து இரண்டாவது கூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உத்தரவு
இந்நிலையில், இந்த தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரால் உத்தரவிடப்பட்டது.
இதற்கமைய ஒரு மாத கால அவகாசத்திற்குள் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் இருக்கும் அதிகாரிகளில், பிரித்தானிய குடியுரிமை கொண்டோர் மற்றும் அமெரிக்க குடியுரிமை கொண்ட அதிகாரிகள் உடனடியாக ஏமனை விட்டு வெளியேற வேண்டும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் ஜனவரி 20ம் திகதி முதல் இணையம் மூலமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த முன்னெச்சரிக்கை அறிக்கை தொடர்பான தகவலை ஐக்கிய நாடுகள் சபை செய்தி நிறுனமான AFP உறுதிப்படுத்தியுள்ளது.