பணயக் கைதிகள் உயிருடன் திரும்பமாட்டார்கள்,ஹமாஸ் அதிரடி அறிவிப்பு
22 Jan,2024
தாம் முன்வைத்த நிபந்தனைகளை இஸ்ரேல் பிரதமர் ஏற்க மறுத்துள்ள நிலையில் தம்மிடமுள்ள எஞ்சிய பணயக்கைதிகள் இஸ்ரேல் திரும்பமாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
போரை நிறுத்தி காஸா பகுதியில் ஹமாஸ் தரப்பின் ஆட்சி தொடரும் என்றும் பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் இராணுவம் உட்பட அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்திருந்தது.
காசாவில் இராணுவத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலியப் பிரதமர் மறுத்திருப்பது, சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் இஸ்ரேல் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கொள்ள வேண்டும் என்றார்.
இதேவேளை பணயக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்றார்.
நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் பிரதமர்
காஸாவில் இருந்து இராணுவத்தை வெளியேற்றவும், கொலைகாரர்கள் மற்றும் துஷ்பிரயோகிகளை விடுவிக்கவும் ஹமாஸ் கோருவதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.