இஸ்ரேல் நோக்கி ஈரான் ஆதரவு படையினர் ட்ரோன் தாக்குதல்
01 Jan,2024
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹமாஸ் படைகளை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேலிய இராணுவ படை பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை இந்த போர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 21, 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் நோக்கி ஈரான் ஆதரவு படையினர் ட்ரோன் தாக்குதல்
இந்நிலையில் காசாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீர் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில் வடக்கு இஸ்ரேல் பகுதி நோக்கி ஈரான் ஆதரவு படையினர் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதுடன் இதனை இஸ்ரேலிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.