போரை நிறுத்தினால் மட்டுமே பிணைக்கைதிகளை விடுவிப்போம் - இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை!
29 Dec,2023
காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் போரை நிறுத்தினால் மட்டுமே பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் உக்கிரமான போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் காசா மீது மேற்கொண்டு வரும் தீவிரமான தாக்குதலால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதம் நடத்தப்பட்ட சிலநாட்கள் போர் நிறுத்தத்தின் போது இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின்னர் மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், உலக நாடுகள் போரை நிறுத்தக் கோரியும் கேட்காமல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறது. ஐநா சபை பலமுறை கண்டனம் தெரிவித்தும் போரை நிறுத்த முடியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலை எச்சரித்துள்ள ஹமாஸ், இஸ்ரேல் போரை நிறுத்தினால் மட்டுமே பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினை முழுமையாக ஒழிக்கும் வரை போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் அறிவித்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.