.இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: காசா கல்லறைகளை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்
15 Dec,2023
.
உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவம் காசாவில் உள்ள கல்லறைகளை அழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 மாதங்களுக்கு மேல் தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தில் பல போர் குற்றங்கள் மீறப்பட்டுள்ளன.
இராணுவம் தேவையின்றி மதத் தளங்களை வேண்டுமென்றே அழிப்பது போர்க் குற்றமாக ஆயுத மோதல் சட்டங்கள் தெரிவிக்கின்றன.
.
இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் இந்த மாத தொடக்கத்தில் பல கணக்கான கல்லறைகளை அழித்துள்ளன.
.
அந்தவகையில் ஷாஜையே (Shajaiye) நகரில் உள்ள துனிசிய கல்லறை (Tunisian cemetery) மற்றும் ஜாபாலிய (Jabaliya)வில் உள்ள அல்-பலூஜா கல்லறை (Al-Faluja cemetery) உட்பட ஆறு கல்லறைகளை இஸ்ரேலிய டாங்கிகள் அழித்ததாக அறிக்கையொன்று கூறுகிறது.
இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
.
இஸ்ரேலிய டாங்கிகள் கல்லறைகள் மீது ஏறி சென்றதற்கான அடையாளங்கள் காட்டப்பட்டுள்ளது.
.
மேலும் யுத்தத்தில் 19,000 பேருக்கு மேல் பலியாகியுள்ளதால் கல்லறை இடப்பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்களை குறைக்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
சர்வதேசத்தின் ஆதரவு இல்லையென்றாலும் ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அளிக்கும் வரை இந்த போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.