அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான விசாரணை தொடக்கம்
15 Dec,2023
.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான விசாரணையை தொடங்குவதற்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின்போது துணை அதிபராக இருந்த ஜோ பைடன் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து லாபமடைந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பைடனுக்கு எதிரான குற்றச்சாட்டை குடியரசு கட்சியினர் முன்வைத்து அவர் மீது விசாரணையை தொடங்குவதற்கு ஆதரவாக பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பைடனுக்கு எதிராக விசாரணையை தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிபர் பைடனுக்கு எதிரான விசாரணை தொடங்கப்படும். செனட் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவியில் இருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும். வாக்கெடுப்பு பின்னர் பேசிய அதிபர் ஜோபைடன், ‘‘அமெரிக்க மக்களின் வாழ்க்கையை சிறப்பாக்குவதற்கு எதையும் செய்வதற்கு பதிலாக என்னை பொய்களால் தாக்குவதில் குடியரசு கட்சியினர் கவனம் செலுத்துகிறார்கள் ” என்றார். பலமாத விசாரணை அங்கீரிக்கப்பட்டுள்ளதால் பதவி நீக்க விசாரணை 2024 வரை நீட்டிக்கப்படுவதை உறுதி செய்கிறது.