தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தண்ணீர் பீய்ச்சி தாக்குதல்
10 Dec,2023
l
மணிலா: தென்சீன கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் நடத்தியுள்ளது. பசிபிக் பெருங்கடலின் தென்சீன கடல் பகுதி உலக நாடுகளின் வர்த்தக பாதையாக உள்ளது. இந்த பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம், மலேசியா, புருனே ஆகிய நாடுகளும் இந்த பகுதிக்கு உரிை கொண்டாடி வருகின்றன. இதனால் ஸ்கார்பரோ, 2வது தாமஸ் ஷோல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் பிலிப்பைன்சும், சீனாவும் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையின் இரண்டு கப்பல்களில் பிலிப்பைன்ஸ் ராணுவத்துக்கு தேவையான உணவு மற்றும் பிற பொருட்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. 2வது தாமஸ் ஷோல்ஸ் பகுதியில் சென்றபோது பிலிப்பைன்ஸ் ராணுவ கப்பல்கள் மீது சீனா கப்பல்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தாக்குதல் நடத்தியுள்ளன. மேலும் மற்றொரு கப்பல் மீது சீன கப்பல் ஒன்று பலமாக மோதி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பிலிப்பைன்சும், அதன் நட்பு நாடான அமெரிக்காவும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.