அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக விளாடிமிர் புதின் அறிவிப்பு!
09 Dec,2023
.
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2008 ஆம் ஆண்டு வரை விளாதிமிர் புதின் அதிபராக பதவிவகித்தார். அடுத்தடுத்து 4 ஆண்டுகளுக்கு பிரதமராக இருந்த அவர், மீண்டும் அதிபராக தேர்வுசெய்யப்பட்டு, தற்போது வரை நீடித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்ட புதினிடம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ராணுவ அதிகாரி அட்டியோம் சோகா கேட்டுக் கொண்டார். அப்போது, தேர்தலில் போட்டியிட உள்ளதை புதின் உறுதிசெய்தார்.
.
உக்ரைனுக்கு எதிரான போர், 10 மாதங்களாக நீடித்துவரும் நிலையில், இது புதினுக்கான ஆதரவை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோரின் ஆதரவை அவர் பெற்றுள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
.
அதேநேரம், ஊழல் சர்வாதிகாரத்தை புதின் ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் ஒருபுறம் குற்றம்சாட்டி வருகின்றனர்.