பிணைக்கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்த ஹமாஸ்: பரிசோதனையில் அம்பலம்
06 Dec,2023
இரண்டு மாதங்களை அண்மித்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பிணைக்கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் காசாவிற்கு கவர்ந்து செல்லப்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கும் பொது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் காண்பிப்பதற்காகவே அவர்களுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஹமாஸ் அமைப்பினரால் கவர்ந்து செல்லப்பட்ட பிணைக்கைதிகள் 51 நாட்கள் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனர்,
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தை நடைமுறைப்படுத்தப்பட்ட போதே இரு தரப்பிலிருந்தும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதன்பொது, விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகளை இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவப்பரிசோதனை செய்த வேளை அவர்களது குருதியில் போதைப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களை விடுவிக்கும் போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டுவதற்காக ஹமாஸ் இயக்கம் அவர்களுக்கு போதைப்பொருளை உட்கொள்ளச் செய்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளதாக இஸ்ரேல் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.