ஹமாஸின் சுரங்கப்பாதைகளை அழிக்க இஸ்ரேல் கையாளும் புது யுக்தி
05 Dec,2023
.
காசாவின் அடியில் உள்ள ஹமாஸ் படையினரின் ரகசிய சுரங்கப்பாதைகளுக்குள் கடல் நீரை நிரப்ப இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி மத்தியதரைக் கடலில் இருந்து நிலத்தடி வலையமைப்பு மூலம் நீரை சுரங்கப்பாதைகளுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை நிலத்தடிக்கு அனுப்பும் திறன் கொண்ட ஐந்து மோட்டார்களை வடிவமைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
.
வடக்கு காசாவில் அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு வடக்கே ஒரு மைல் தொலைவில் இந்த பம்புகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
.
உலக நாடுகளின் கண்டனங்கள்
ஆனால் இந்த திட்டத்தை இஸ்ரேல் நிறைவேற்றினால், காசா பகுதியில் உள்ள நல்ல தண்ணீர் பாதிக்கப்படுவதோடு மேலும் பல அபாயங்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
.
அத்துடன் அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் கண்டனங்களை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
.
இதேவேளை 2015 ஆம் ஆண்டில் எகிப்தில் சுரங்கப்பாதைகளை வெள்ளத்தில் மூழ்கடித்தபோது, உள்ளூர் விவசாயிகள் தங்கள் அறுவடை அழிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தனர்.