துபாய்ல் இஸ்ரேல் அதிபரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி!
01 Dec,2023
.
துபாயில் நடைபெறும் உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேசினார். குறிப்பாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் ஆகியோருடன் மோடி கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக்கும், பிரதமர் மோடியும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
.
அப்போது, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். அத்துடன். போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும் என இஸ்ரேல் அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நிலையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.