இத்தாலியில் பெண் கொலைகள் அதிகரிப்பு: ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
26 Nov,2023
.
ரோம்: இத்தாலியில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 11ம் தேதி 22 வயது மாணவி ஒருவரை அவரது முன்னாள் காதலன் கொன்றார். இந்த ஆண்டு மட்டும் கடந்த 11ம் தேதி வரை 106 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிரான கொலைகளுக்கு இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். பாலின வன்முறைக்கு எதிரான சட்டங்களை மேலும் கடுமையாக்குவதாக அவர் உறுதியளித்தார்.
இத்தாலி அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2022ல் 106 பேர், 2021ல் 139 பேர், 2020ல் 116 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து இத்தாலி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். ரோமில் 50,000 பேரும், மிலனில் 30,000 பேரும் போராட்டங்களை நடத்தி கோஷங்களை எழுப்பினர்.