பெண்கள், குழந்தைகளை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்துகிறது : பிளிங்கென் இஸ்ரேல் வருகை.!
03 Nov,2023
அமெரிக்கா
வாஷிங்டன் : பெண்கள், குழந்தைகளை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்துகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு ஹமாஸ் தீங்கு விளைவிப்பதை குறைக்க நடவடிக்கை தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் இஸ்ரேல் வருகை.!
இஸ்ரேல்: போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் இஸ்ரேல் வருகை தந்துள்ளார். ஹமாஸ் அமைப்புடன் இஸ்ரேல் போர் புரிந்து வரும் நிலையில் அந்நாட்டுக்கு ஆன்டனி பினிங்கென் சென்றுள்ளார். கடந்த 16ம் தேதி ஆன்டனி பிளிங்கென் இஸ்ரேல் சென்ற நிலையில் 2-வது முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஹமாஸ் அமைப்பினருடன் போர் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது.