ஹமாஸின் அதிரடியில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி பலி
02 Nov,2023
காசாவில் ஹமாஸ் அமைப்புடன் இடம்பெற்ற மேதலில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் படைத்துறை அறிவித்துள்ளது.
இந்த மோதலில் 188 பராக் படைப்பிரிவின் 53 வது பட்டாலியனின் தளபதியான லெப்ரினன்ட் கேணல் சல்மான் ஹபாகா, (வயது 33 ) என்ற தளபதியே உயிரிழந்தவராவார்.
வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதலில்
புதன்கிழமை இரவு வடக்கு காசா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதியிலிருந்து இதுவரை 300 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் 18 பேர் தற்போதைய தரைப்படை நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய படைத்துறை தெரிவித்துள்ளது.