ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட பணயக் கைதிகள்காணொளி,
30 Oct,2023
,
கடத்தப்பட்ட பணயக்கைதிகளை இஸ்ரேல் பிரதமர் விடுவிக்கவேண்டுமென தெரிவிக்கும் காணொளி ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
ஹமாஸின் சமூக வலைத்தளத்தில், "அல்-கஸ்ஸாமால் பிடிக்கப்பட்ட பல சியோனிஸ்ட் கைதிகள் நெதன்யாகுவிற்கும் சியோனிச அரசாங்கத்திற்கும் ஒரு செய்தியை அனுப்புகிறார்கள்" என்று விவரிக்கப்பட்ட காணொளியில்,
,
ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பால் இடம்பெற்ற படுகொலையை தடுக்கத் தவறிய பிரதமர் நெதன்யாகு, போர்நிறுத்தம் செய்து பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியிலும் தோல்வியடைந்து விட்டார் என பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
,
இவ்வாறு குற்றம்சாட்டும் பெண்கள் எலினா ட்ரோபனோவ், டேனியல் அலோனி மற்றும் ரிமோன் கிர்ஷ்ட் என அடையாளம் காணப்பட்டனர்.
,
ட்ரோபனோவ் ஒக்டோபர் 7 ஆம் திகதி கிப்புட்ஸ் நிர் ஓஸில் இருந்து அவரது தாய், அவரது மகன் மற்றும் அவரது மகனின் காதலியுடன் கடத்தப்பட்டார். அவரது கணவர் கொலை செய்யப்பட்டார். கிர்ஷ்ட் தனது கணவருடன் கிப்புட்ஸ் நிரிமில் இருந்து கடத்தப்பட்டார்.
,
அலோனி தனது மகள், அவரது சகோதரி, அவரது மைத்துனர் மற்றும் அவரது இரண்டு இரட்டை மருமகள்களுடன் நிர் ஓஸில் இருந்து கடத்தப்பட்டார்.
,
எனினும் இந்த காணொளி குறித்து கருத்து வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது ஹமாஸ் அமைப்பின் கொடூரமான உளவியல் யுத்தம் என விபரித்துள்ளார்