அமெரிக்கா செல்லவுள்ள சீன வெளியுறவு அமைச்சர்
26 Oct,2023
எம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து, சர்வதேச சவால்களைச் சமாளிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-சீனா உறவுகள் குறித்த தேசியக் குழுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சரியான பாதையை உருவாக்குவது
அமெரிக்காவும் சீனாவும் இணைந்து ஒரு சரியான பாதையை உருவாக்குவது தற்போதைய உலகுக்கு மிக முக்கியமான ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரஸ்பர மரியாதை, சம ஒத்துழைப்பு உள்ளிட்ட கொள்கைகளின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலையான உறவு கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், சீன அதிபர் இந்த கடிதத்தை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.