அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகல்: ரஷ்ய நாடாளுமன்றம் ஒப்புதல்
26 Oct,2023
.
மாஸ்கோ: சர்வதேச அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் மசோதாவிற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்கா அணு ஆயுத சோதனையை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை, ஆனால் ரஷ்யா அதனை ஏற்று அணு ஆயுத சோதனையை நடத்தாமல் உள்ளது, தேவைப்பட்டால் நாடாளுமன்ற ஒப்புதலுடன் அணு ஆயுத தடைக்கு வழங்கிய ஒப்புதலில் இருந்து ரஷ்யா வெளியேறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் சிடிபிடி எனப்படும் விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தின் ஒப்புதலை ரத்து செய்வதற்கான மசோதாவிற்கு ரஷ்யாவின் நாடாளுமன்ற கீழவை கடந்த வாரம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மீதான இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தின் மேலவையில் நேற்று நடைபெற்றது. ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆதரவாக உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து இறுதி ஒப்புதலுக்காக அதிபர் விளாடிமிர் புதினுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும்.