காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவு- இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்
09 Oct,2023
காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் இல்லை உணவில்லை எரிபொருள் இல்லை முழுமையாக காசாவை முற்றுகையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன்என அவர் தெரிவித்துள்ளார்
காசாவின் வான்வெளியை கரையோரபகுதியை இஸ்ரேல் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.காசவிற்குள் யார் செல்லவேண்டும் எதனை கொண்டுசெல்லவேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது
எங்கள் பதில் நடவடிக்கை மூலம் மத்திய கிழக்கை மாற்றப்போகின்றோம் - இஸ்ரேலிய பிரதமர்
மத்திய கிழக்கை மாற்றப்போகின்றோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாசின் தாக்குதலிற்கான இஸ்ரேலின் பதில்நடவடிக்கை மத்தியகிழக்கை மாற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் மிகமோசமான பயங்கரமான அனுபவங்களை எதிர்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.