ஈரானிடமிருந்து கைப்பற்றிய 1 மில்லியன் துப்பாக்கி ரவைகளை உக்ரைனிற்கு அனுப்பியது அமெரிக்கா
05 Oct,2023
ஈரானிடமிருந்து கைப்பற்ற 1.1மில்லியன் துப்பாக்கி ரவைகளை அமெரிக்கா உக்ரைனிற்கு அனுப்பியுள்ளது.
அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது.
மத்தியகிழக்கில் யுத்தங்களிற்கு பொறுப்பான அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் யேமனிற்கு சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்து துப்பாக்கி ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை இவற்றை உக்ரைனிற்கு அனுப்பிவைத்துள்ளதாக சென்ட்கொம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 9 ம் திகதி மர்வன் 1 எனப்படும் தேசம்குறிப்பிடப்படாத கப்பலில் இருந்து இந்த துப்பாக்கிரவைகளை கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சொத்து ஒன்றின் உரிமையாளர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அதனை அரசாங்கம் கைப்பற்றலாம் என்ற சட்டத்தை பயன்படுத்தி கப்பலை தனதாக்கிய அமெரிக்கா அதிலிருந்த துப்பாக்கிரவைகளை உக்ரைனிற்கு அனுப்பியுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படையின் கப்பலே அது என குற்றம்சாட்டியே அமெரி;க்கா அந்த கப்பலை தனதாக்கிகொண்டது.
உக்ரைன் வெடிபொருட்களை பயன்படுத்தும் வேகத்திற்கு தங்களது உற்பத்திகளால் இடம்கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாக உக்ரைன் மேற்குலக சகாக்கள் தெரிவித்துள்ளனர்.