உக்ரைன் படைகள் முன்னேற்றம் ரஷ்யாவிற்கு பேரிழப்பு
04 Oct,2023
உக்ரைன் படையினர் செவ்வாய் மாலையில், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள Tavriia பகுதியில் முன்னேறி வருவதாக Tavriia செயல்பாட்டு மற்றும் மூலோபாயக் குழுவின் தளபதி Oleksandr Tarnavskyi, தெரிவித்தார்.
உக்ரைனிய துருப்புக்களின் பீரங்கி படைப் பிரிவுகள் இந்த குறிப்பிட்ட போர் முனையில் கடந்த நாளில் 1,198 துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக தளபதி கூறினார்.
ரஷ்ய படைகளுக்கு பேரிழப்பு
அத்துடன் நடந்த மோதலில் ரஷ்ய படைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களையும் அவர் வெளியிட்டார்.
இதன்படிரஷ்ய படையினர் 261 பேர், கொல்லப்பட்டதுடன் 10 படையினர் சரணடைந்தனர். 20 எதிரி இராணுவ உபகரணங்கள் அழிக்கப்பட்டன.
இதில் ஒரு தாங்கி, இரண்டு கவச போர் வாகனங்கள், ஏழு பீரங்கி அமைப்புகள், ஐந்து வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சொந்தமான ஐந்து சிறப்பு வாகனங்கள் அழிக்கப்பட்டன. மேலும், எட்டு எதிரி வெடிமருந்து களங்சிய நிலையங்களும் அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.